மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா - சண்டே ஸ்பெஷல்: பிரியாணியை எப்படிச் சாப்பிடணும்?

கிச்சன் கீர்த்தனா - சண்டே ஸ்பெஷல்: பிரியாணியை எப்படிச் சாப்பிடணும்?

மனுஷன் ஆடி ஓடி அலைஞ்சு திரிஞ்சு சம்பாதிக்கிறதெல்லாம் எதுக்கு? எல்லாம் அரை சாண் வயித்துக்குதானே!

பிரியாணிக்கு தால்சாதான் சரின்னு ஆரம்பிச்சு பழைய சோத்துக்கு பக்குவமான வெஞ்சனம் வேணும்னு கறாரா இருக்கும் ஆட்களின் ரசனையெல்லாம் வேற லெவலா இருக்கும். அனுபவிச்சு சாப்பிடுறது ஒரு தனி சுகம். அதுவும் இதுக்கு இதுதான் காம்பினேஷன்; இப்படிதான் சமைக்கணும், சாப்பிடணும்னு ஒரு கொள்கை கோட்பாட்டோட இயங்குறவங்க உலகின் ஆகச் சிறந்த ரசனைக்காரங்க.

அந்த வகையில் பிரியாணிங்கிறது உணவல்ல. கோடான கோடி மக்களின் உணர்வு. பிரியாணி சாப்பிடப்போற நிமிடங்கள் கவலை, டென்ஷன், அழுத்தம், துக்கம், சோகம் மறந்து, சொர்க்கத்தோட காலிங் பெல்ல அடிச்சிட்டு வர வழிவகுக்கப்போற நிமிடங்கள். காஞ்சமாடு கம்பங் கொல்லைல பாயற மாதிரி பிரியாணிய டீல் பண்ணக் கூடாது.

சூடான பிரியாணியோட வாசத்தை உள்வாங்கி நுரையீரல் முழுக்க நிரப்பிக்கணும். ஆக்ஸிஜனோட பிரியாணி வாசமும் ஒவ்வொரு செல்லா நிரம்பி சொர்க்கத்தை நோக்கிய பயணத்தின் முதல் கியரை போடும். கால் பிளேட் அளவுதான் தட்டிலோ, இலையிலோ இருக்கணும். சாப்பிடறதுக்கு முன்னாடி பிரியாணியைத் தூர்வார்றது ரொம்ப அவசியம்.

ஒரு ஏலக்காய்கூட இல்லன்னு உறுதி செஞ்சப்புறம், அந்தப் பஞ்சு மாதிரி வெந்த கறியை லைட்டா பிச்சு அதோட பிரியாணிய கொஞ்சமா சேர்த்து ஒரு வாய் சாப்பிட்டா... அடடா! கண்கள் மூடி, அந்த மிதமான காரத்தையும் மசாலாவையும் சுவை மொட்டுகள் உள்வாங்கும்போது வண்டி டாப் கியர்ல சொர்க்கத்தை நோக்கிப் போயிட்டிருக்கும்.

நல்ல பிரியாணிக்குத் தொட்டுக்க கிரேவி தேவையில்லை. இருந்தாலும் சீரக சம்பா பிரியாணிக்கு தால்ச்சாவும், பாஸ்மதிக்கு கத்திரிக்காய் பச்சடியும் அம்சமான ஜோடி. பிரியாணிக்கு அவிச்ச முட்டையே அதிகம். ஏகப்பட்ட சைடிஷ்களை ஆர்டர் பண்ணி பிரியாணியின் தனிச் சுவையை உணர்வதை மிஸ் பண்ணக் கூடாது.

இப்ப பிரியாணியோட ஸ்வீட் தர்றாங்க. கேசரியோ, பிரெட் அல்வாவோ, என்ன ஸ்வீட்டா இருந்தாலும், கடைசி கவளம் பிரியாணியோடதான் முடிக்கணும்ங்கிறத மறந்துடாதீங்க.

தரமான பிரியாணிக்கு அழகும் அடையாளமும், பிரியாணி சாப்பிட்டு சுமார் 3-4 மணி நேரத்தில் பசி எடுக்கணும். அப்பதான் அது அம்சமான பிரியாணி.

என்ன சண்டே ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட தயாராகிவிட்டீங்களா?

நேற்றைய ரெசிப்பி : அரிசி மாவு டேப் சிப்ஸ்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 11 ஜூலை 2021