மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு!

ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்துமூலம் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பதிவேட்டை வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை மானிய விலையிலும், இலவசமாகவும் வழங்கி வருகிறது. அரிசி, பருப்பு, பாமாயில் ,சர்க்கரை ,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் முறைகேடு நடப்பதாகவும், பொருட்களில் எடை குறைப்பு, காலாவதியான பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பது போன்றவை நடப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், ரேஷன் பொருட்கள் குறித்து இணையவழியில் புகார் தெரிவிப்பது சிரமமாக உள்ளதாக மக்கள் தரப்பிலிருந்து புகார் வருகின்றன என ஆய்வு கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் எழுத்துமூலம் புகார் தெரிவிக்க, ஒவ்வொரு ரேஷன் கடையிலும் புகார் பதிவேடு வைக்க வேண்டும். வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் இணையவழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு இன்று(ஜூலை 10) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜெயசந்திரன் ராஜா கூறுகையில் ” புகார் தெரிவிக்கும் வசதி ஏற்கனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ளது. ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டிற்கு வந்தபிறகு, மக்கள் வாங்கும் பொருட்கள் குறித்து அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அந்த எஸ்எம்எஸில் உள்ள லிங்க் மூலம் மக்கள் நிறை, குறைகளை தெரிவிக்க வசதி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் தங்களின் நிறை, குறைகளை எழுத ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்த பதிவேட்டில் ஊழியர்களின் சேவை, பொருட்களின் தரம் குறித்து மக்கள் கருத்துக்களை பதிவிட வேண்டும். இந்த பதிவேட்டை சூப்பர்வைசர், சூப்பிரண்டு உள்ளிட்டோர் கண்காணித்து, குறைகள் இருப்பின், அதன் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிதான் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் புகார் புத்தகம் வழங்கப்படவுள்ளது.

அதுபோன்று, சப்ளை செய்கிறவர்கள் சரியான முறையில் தரமான பொருட்களை விநியோகம் செய்தால்தான், கடை ஊழியர்களால் தரமான பொருட்களை அளிக்க முடியும். இதில் கடைக்காரர்களால் என்ன செய்ய முடியும். பருப்புகள், அரிசி உள்ளிட்டவைகளை மொத்தமாக சாக்கில் கொண்டுவராமல், பாக்கெட்டில் வந்தால் ஊழல் நடக்க வாய்ப்பில்லை”என்று கூறினார்.

தற்போது, ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக கண் விழி படலம் அடையாளத்தை பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும் வழங்கினார்.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 10 ஜூலை 2021