மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா : செக் வைக்கும் தமிழக மாவட்டங்கள்!

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா :  செக் வைக்கும் தமிழக மாவட்டங்கள்!

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அம்மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி, கோவை, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தணிந்து வந்தாலும், சில மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகமாகதான் இருக்கிறது. குறிப்பாக, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மட்டுமே 53 சதவிகித பாதிப்பு பதிவாகிறது. அதுமட்டுமில்லாமல், கேரளாவில் ஜிகா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது என்ற செய்தி கூடுதல் பயத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கேரளா எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேரளாவிலிருந்து வருவோர் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இ-பாஸ் வைத்திருந்தும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லையென்றால் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அதுபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு-கேரளா எல்லை மூடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் எல்லையிலுள்ள எருமாடு, சேரம்பாடி, பாட்டவயல், பிதர்காடு, அம்பலமூலா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர் பணிக்கு செல்கின்றனர்.

கேரளாவில் தொற்று அதிகரிப்பதால் நீலகிரி எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் எனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு இன்று முதல் இ-பாஸ் மற்றும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 10 ஜூலை 2021