மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: அரிசி மாவு டேப் சிப்ஸ்!

கிச்சன் கீர்த்தனா: அரிசி மாவு டேப் சிப்ஸ்!

பெட்டிக்கடை, மளிகைக்கடை, கார்ப்பரேட் உணவகம், ஆபீஸ் கேன்டீன் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் நொறுக்கு தீனி, சிப்ஸ். இதில்தான் எத்தனை வெரைட்டீஸ். சரி... இது உடலுக்கு நல்லதா என்றால், ‘இல்லை’ என்பதுதான் மருத்துவம் சொல்லும் அழுத்தமான பதில். இந்தக் குறையைத் தீர்க்கும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பாரம்பரியமான அரிசி மாவு டேப் சிப்ஸ்.

என்ன தேவை?

அரிசி மாவு – ஒரு கப்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

ஓமம் – அரை டீஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – ஒரு கப் + அரை கப்

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஓமம், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதித்தவுடன் இதில் அரிசி மாவைச் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் கலவையை நன்கு கிளறி இன்னும் அரை கப் வெந்நீரைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை கையளவு உருண்டைகளாக்கி ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு, எண்ணெய் தடவிய தட்டில் பிழிந்துகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டில் பிழிந்துவைத்திருக்கும் மாவைச் சிறு துண்டுகளாக்கி எண்ணெயில் பொரித்தெடுத்தால் அரிசி மாவு டேப் சிப்ஸ் தயார்.

நேற்றைய ரெசிபி : பிரெட் கட்லெட்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 10 ஜூலை 2021