மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

எந்த அலையையும் சமாளிக்கலாம்: செயலாளரின் அறிவுரை!

எந்த அலையையும் சமாளிக்கலாம்: செயலாளரின் அறிவுரை!

கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளரைச் சந்திப்பதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (ஜூலை 8) மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுபாடு குறித்து முதல்வர், ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க இருந்தார். தற்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்தச் சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர், டாக்டர் வி.கே.பால் ஆகியோரை சந்திக்க ஏற்கனவே அனுமதி பெறப்பட்டுள்ளதால் இந்தப் பயணம்.

இந்தச் சந்திப்பில், முதல்வர் சொன்னப்படி, தடுப்பூசி கேட்பது, எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது, 11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இந்தாண்டிலேயே தொடங்குவது, கறுப்பு பூஞ்சை மருந்தைக் கூடுதலாக பெறுவது உள்ளிட்டவை பற்றி பேசி வலியுறுத்தப்படும்.

புதிய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் அனுமதி தந்ததும், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சருடன் மீண்டும் சென்று சந்திக்க உள்ளோம்.

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடக்கிறது. இரண்டு கோடி வரை தடுப்பூசி போடலாம். தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறும்போது தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணிகள் நின்று விடுகிறது. தடுப்பூசி சீராக வருவதற்கும் மக்கள்தொகை அடிப்படையில் அவை வழங்குவது குறித்தும் பேசப்படும்.

கட்டுப்பாட்டுகளுடன் கூடிய தளர்வுகள் என்பதை மக்கள் உணர வேண்டும். மெரினா கடற்கரையில் எந்தவித பாதுகாப்பின்றி மக்கள் செல்கின்றனர். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அடிக்கடி கை கழுவுவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே எந்த அலை வந்தாலும் சமாளிக்க முடியும். சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதுபோல் கடைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 9 ஜூலை 2021