மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

சரிந்த ஜிஎஸ்டி வரி வசூல்... காரணம் என்ன?

சரிந்த ஜிஎஸ்டி வரி வசூல்... காரணம் என்ன?

சரக்கு மற்றும் சேவை வரி என்று சொல்லப்படும் ஜிஎஸ்டி வரியானது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி மூலம் வசூலான வரி வருமானம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழே சென்றிருக்கிறது.

நம் நாட்டில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2017 ஜூலை 1ஆம் தேதி 17 வரிகள், 13 கூடுதல் வரிகள் ஆகியவற்றை ஒழித்து, நாடு முழுவதும் ஒரே வரி முறையான ஜிஎஸ்டி (Goods and Services Tax) எனப்படும் சரக்குகள் மற்றும் சேவை வரி அமலானது.

கொரோனா பேரிடர் காலத்திலும் வர்த்தகர்கள் ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்தி வந்த காரணத்தால், கடந்த எட்டு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது. கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் ஜிஎஸ்டி வரி வாயிலாக சுமார் ரூ.11.36 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

நடப்பு 2021-2022ஆம் நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜிஎஸ்டி. ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி புதிய சாதனையை படைத்தது. அதற்கடுத்த மே மாதத்திலும் ஜிஎஸ்டி வாயிலாக ரூ.1.02 லட்சம் கோடி வசூலானது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக வசூலாகியுள்ளது. அந்த மாதத்தில் வசூலாக ஜிஎஸ்டி வரி ரூ.92,849 கோடி. கடந்த 2020 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கீழே சென்றிருக்கிறது.

இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.92,849 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.16,424 கோடியும், மாநில ஜிஎஸ்டி. வரி ரூ.20,397 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.49,079 கோடியும், செஸ் ரூ.6,949 கோடியும் அடங்கும்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பல மாநிலங்களில் முழுமையான அல்லது பகுதி அளவிலான ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வணிகச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக வரி வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

-ராஜ்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 9 ஜூலை 2021