மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வந்து கொண்டிருந்த கொரோனா இரண்டாம் அலை கடந்த இரண்டு நாட்களாக சற்று அதிகரித்துள்ளது. அதாவது, தினசரி குணமடைவோரின் விகிதத்தை விட பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா அதிகரிப்பு என்பது சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் லாவ் அகர்வால், “தினசரி கொரோனா பாதிப்புகளில் 80 சதவிகிதம் 90 மாவட்டங்களில் இருந்து பதிவாகிறது. கொரோனா பாதிப்புகளில் 53 சதவிகித பாதிப்பு கேரளா (32%) மற்றும் மகாராஷ்டிரா (21) மாநிலங்களில் பதிவாகிறது. கேரளாவில் 14 மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவில் 15 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 66 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. 86 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100க்கு கீழ் உள்ளது. தமிழ்நாட்டில் சில மாவட்டங்களிலும், புதுச்சேரியில் 1 மாவட்டத்திலும் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டாவது அலையை முற்றிலும் ஒழிக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்துவதே எங்களது நோக்கம். பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால்,”கர்ப்பிணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது, தளர்த்தவும் கூடாது. சுற்றுலா தலங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதை பார்க்கும்போது பயமாக இருக்கிறது. இதன்மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

-வினிதா

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

வெள்ளி 9 ஜூலை 2021