மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

ராமேஸ்வரம் : காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

ராமேஸ்வரம் : காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

ஆனி அமாவாசையை ஒட்டி தடையை மீறி கோயில்கள் மற்றும் நீர் நிலைகளில் முன்னோர்களுக்குப் பொதுமக்கள் இன்று தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாகப் புனித ஸ்தலமாக கருதப்படும் ராமேஸ்வரத்தில் மக்கள் அதிகளவில் கூடியிருப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது மரபு. கொரோனோ தடை உத்தரவு அமலிலிருந்ததால் கடந்த சில மாதங்களாக நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பலரும் வீடுகளிலேயே முன்னோர்களை வழிபட்டு வந்தனர்.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பக்தர்கள் அதிக அளவில் கூடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதே சமயத்தில் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனைக்குத் தடை விதிக்கப்பட்டன.

இருந்த போதிலும் இன்று ஆனி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் மக்கள் அதிகளவு குவிந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டனர். இதனால், கொரோனா பரவல் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுபோன்று திருவள்ளூரில் உள்ள வீரராகவ சுவாமி கோயிலில் ஆனி அமாவாசை தினத்தை முன்னிட்டு கோயில் முன்பு ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர். திருவள்ளூர் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்தை ஒட்டிய பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் இந்த கோயிலுக்கு முன் தர்ப்பணம் கொடுக்க திரண்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

வெள்ளி 9 ஜூலை 2021