மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: பாதாம் ஷீரா!

ரிலாக்ஸ் டைம்: பாதாம் ஷீரா!

புதிய இயல்பு என்பதைப் பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இதயத்துக்கு ஆரோக்கியத்தை வழங்கும் புதிய இயல்புக்கு மாற வேண்டியதும் அவசியமாகும். இதய ஆரோக்கியத்தை அடைவதற்கான முதல்படி ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது. பாதாம் போன்ற நட்ஸ் வகைகளைக் குடும்பத்தில் அனைவரும் தங்கள் அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ளத் தொடங்குவது நல்ல தொடக்கப்புள்ளியாகும். அதற்கு இந்த பாதாம் ஷீரா உதவும்.

எப்படிச் செய்வது?

10 பாதாம் பருப்புடன் ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் பாதாமின் தோலை உரித்து மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் ஊறவைத்த கசகசா, ஏலக்காய் ஒன்று, ரோஜா இதழ்கள் பத்து, நான்கு டீஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து அரைக்கவும். ஒரு கப் பாலைக் காய்ச்சி அதனுடன் அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்து, பாலை மறுபடியும் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து இறக்கவும். சிறிதளவு பிஸ்தாவை மெலிதாகச் சீவி மேலாகத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

சிறப்பு

பாதாம் பருப்பில் காணப்படும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து கொழுப்பு சேர்வதைத் தடுத்து, உடல் எடையை நிர்வகிக்க உதவுகின்றன. உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வெள்ளி 9 ஜூலை 2021