மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு ஒத்துழைப்பு: தமிழ்நாடு அரசு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு ஒத்துழைப்பு: தமிழ்நாடு அரசு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒன்றிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான கட்டுமான பணிகளும், வெளிப்புற நோயாளிகள் பிரிவு மற்றும் எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எந்தவித கட்டுமான பணிகளும், மருத்துவச் சேர்க்கையும் தற்போது வரை நடைபெறவில்லை. அதனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை தற்காலிக இடத்தில் தொடங்கவும், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நோயாளிகள் பிரிவைத் தொடங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று (ஜூலை 7) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், 'மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம். மேலும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை, ஜூலை 9ஆம் தேதி சந்திக்கவுள்ளார். அன்று மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்தும் பேசப்படும்.

மாணவர் சேர்க்கை மற்றும் தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவதற்கான, ஒன்றிய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கான கூட்டம் ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவது குறித்து எடுக்கப்படும் முடிவைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 8 ஜூலை 2021