மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

எஃப்.டி-யைப் புதுப்பிக்க தவறினால் வட்டி விகிதம் குறையும்: ரிசர்வ் வங்கி

எஃப்.டி-யைப் புதுப்பிக்க தவறினால் வட்டி விகிதம் குறையும்: ரிசர்வ் வங்கி

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள எஃப்.டி எனப்படும் நிரந்தர வைப்புத்தொகை கணக்குக்கான அவகாசத்தைப் புதுப்பிக்க தவறினால் குறைந்தபட்ச வட்டி மட்டுமே வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளில் மக்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பணத்தை நிரந்தர வைப்புத்தொகையாக வைத்து வட்டி பெறுகின்றனர். இந்த வைப்புத்தொகை 15 நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை வைக்கப்படுகிறது. ஒவ்வொரு திட்டத்துக்கேற்ப வட்டி வழங்கப்படுகிறது.

வட்டி விகிதம் வங்கிகளுக்கிடையே வேறுபடுகிறது. தற்போது நிரந்தர வைப்புத்தொகைக்கு சராசரியாக 5 சதவிகித வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 0.5 சதவிகிதம் கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது. அதேநேரம் சாதாரண சேமிப்புக் கணக்குக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் பெரும்பாலான வங்கிகளில் 2.9 சதவிகிதமாக உள்ளது.

வழக்கமாக, வங்கி வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகை கணக்குக்கான அவகாசம் முடியும் நிலையில் தானாகவே வங்கிகளில் புதுப்பித்துக் கொள்ளப்படும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி நிரந்தர வைப்புத்தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் காலத்தில் வங்கிகளுக்குச் சென்று புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதற்காக தனியான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

அப்படி செய்தால்தான் நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி வழங்கப்படும். அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத்தொகைக்கான வட்டி சேமிப்புக் கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும். அதாவது 2.9 சதவிகித வட்டி மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

வியாழன் 8 ஜூலை 2021