மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

இழப்பீட்டு தொகை: இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு!

இழப்பீட்டு தொகை: இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு உத்தரவு!

விபத்து வழக்குகளில் முறைகேட்டைத் தடுக்க இழப்பீட்டு தொகை டெபாசிட் செய்யப்பட்டதை இ-மெயில் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடாகச் செலுத்தப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயைக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியரை கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆய்வுக்குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையில், ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் மோசடி நடந்துள்ளதாகவும், பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை சென்றடையவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இழப்பீடு தொடர்பான ஆவணங்களைச் சரிபார்ப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், அப்துல் குத்தூஸ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், “அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், இழப்பீட்டு தொகை டெபாசிட் செய்த விவரத்தை 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயங்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்க வேண்டும்.

இழப்பீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய மாவட்டம்தோறும் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்குப் பின்பு, தொடர்பு அதிகாரிகள் மாவட்டங்களில் உள்ள தீர்ப்பாயங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என்று கூறி, வழக்கு விசாரணையை 27ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 8 ஜூலை 2021