மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

கோவை - திருப்பதி: நாளை முதல் சிறப்பு ரயில்கள்!

கோவை - திருப்பதி: நாளை முதல்  சிறப்பு ரயில்கள்!

கோவையில் இருந்து திருப்பதிக்கு நாளை (ஜூலை 9) முதல் வாரத்தில் 4 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து திருப்பதிக்கு வியாழன், வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு ரயில் (எண்.06194) இயக்கப்படுகிறது. நாளை 9ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது. கோவையிலிருந்து காலை 6 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.

இந்த ரயில் திருப்பூருக்கு 6.43 மணிக்கும், ஈரோடுக்கு 7.25 மணிக்கும், சேலத்துக்கு 8.22 மணிக்கும் வந்து செல்கிறது. இதுபோல் திருப்பதியில் இருந்து கோவைக்கு வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை ஆகிய நாட்கள் ரயில் (06193) இயக்கப்படுகிறது.

வருகிற 10ஆம் தேதி திருப்பதியில் மதியம் 2.55 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 10.55 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் சேலத்துக்கு இரவு 7.37 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.37 மணிக்கும், திருப்பூருக்கு 9.23 மணிக்கும், கோவை வடக்கு ரயில் நிலையத்துக்கு 10.19 மணிக்கும் சென்றடைகிறது. இந்தத் தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 8 ஜூலை 2021