மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும்: தமிழ்நாடு அரசு!

கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும்: தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கொன்றில், “இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் மற்றும் கோயில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளது. பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பதிவான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூலை 8) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பதிவான சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் மாயமாகவில்லை. அவை புலன் விசாரணை அலுவலரிடம் உள்ளது. கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மனுதாரர் வெங்கட்ராமன் தரப்பில், தலைமை வழக்கறிஞர் தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல் பணி ஓய்வுபெற்ற பின், ஏழு புகார்கள் அளித்தும் அதன் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த அனைத்து வழக்குகளையும் குறிப்பிட்ட அமர்வு முன்பு விசாரணைக்கு பட்டியலிட ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் பதில் மனுவுக்குப் பதிலளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 8 ஜூலை 2021