மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியின் நிலை என்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.133 கோடியின் நிலை என்ன?

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியாக வழங்க ஒதுக்கப்பட்ட 133 கோடி ரூபாய் எப்படிப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று (ஜூலை 8) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, கண் பார்வையற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம் கண் பார்வையற்றவர்களுக்குப் பொருந்தாது என அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். அதனால், கண் பார்வையற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வாதிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக 1,000 ரூபாய் மட்டும் வழங்கப்படும் என்றும் கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என்றும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க 133 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அரசு கூறியது. அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 64 கோடியே 42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதத் தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாதிட்டார்.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கென்று அரசு ஒதுக்கீடு செய்த 133 கோடி ரூபாயில் மீதமுள்ள 73 கோடி ரூபாய் நிலை என்ன? என்று கேள்வி கேட்டனர். ரூ.133 கோடி எப்படி பயனர்களுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 8 ஜூலை 2021