மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் மாக்டெயில்!

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் மாக்டெயில்!

கோடைக்காலம் முடிந்தாலும் வெயில் கொடுமை குறைவதாக தெரியவில்லை. இந்த நிலையில் மனதுக்கு இதமாக, உடலுக்குப் புத்துணர்ச்சித் தரும் இந்த மாக்டெயில் செய்து சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

மாதுளை முத்துகள், விதை நீக்கிய சாத்துக்குடி, சப்போட்டா, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழங்கள் சேர்த்த கலவை இரண்டு கப் எடுக்கவும். இந்த பழக்கலவையை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

தலா இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிடவும். குமிழ்கள் வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.

ஒரு தட்டில் சிறிதளவு சர்க்கரையைத் தூவி ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்து, அதன் விளிம்பில் தேன் தடவி, சர்க்கரை தூவிய தட்டின்மேல் டம்ளரை கவிழ்த்து, மெதுவாகச் சுழற்றவும். கண்ணாடி டம்ளர் விளிம்பில் சர்க்கரை படிகமாக உருவாகும். இந்த டம்ளரில் ஜூஸை ஊற்றி உடன் சர்க்கரை சிரப் சேர்த்து ஐஸ் கட்டிகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்பு

பழங்களுடன் ஐந்து புதினா இலைகளைச் சேர்த்து அரைத்து ஜூஸ் செய்தால் வித்தியாசமான மணக்கும் சுவை கிடைக்கும்.

சிறப்பு

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த மாக்டெயில் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது. சத்துகள் நிறைந்தது.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 8 ஜூலை 2021