மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

செப்டம்பர் 5ல் நீட் தேர்வா? : என்டிஏ விளக்கம்!

செப்டம்பர் 5ல் நீட் தேர்வா? : என்டிஏ விளக்கம்!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் அறிவிப்பு போலியானது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்டம்பர் 13ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் நுழைவுத் தேர்வு பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், நீட் தேர்வு நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே இருக்கிறது.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டதுபோல் ஒரு அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில்,”2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5ஆம் தேதி நடத்தப்படும். பேனா, காகித முறையில் நேரடியாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும்.தேர்வு, பாடத்திட்டம், வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினீத் ஜோஷி,”சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அறிக்கை போலியானது. என்டிஏ சார்பில் எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. அந்த அறிக்கை மார்பிங் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தேதிக்காக காத்து கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் இந்த போலி அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 7 ஜூலை 2021