மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

கொரோனா பலியைவிட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம்!

கொரோனா பலியைவிட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம்!

ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது கொரோனா மரணங்களைவிட அதிகம் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

‘‘இந்தியா மற்றும் இதர வளரும் நாடுகளில் அதிகளவிலான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்தில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது கொரோனா மரணங்களைவிட அதிகம். உயிரிழப்பவர்களில் 60 சதவிகிதப் பேர் இருசக்கர வாகன ஓட்டிகள் இருசக்கர வாகன போக்குவரத்து பாதுகாப்புதான் இப்போதைய தேவை’’ என்று வாகன விபத்து மற்றும் பாதுகாப்பு பற்றிய காணொலி கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசிய நிதின் கட்கரி கூறியுள்ளார்.

“2030ஆம் ஆண்டுக்குள் எந்த விபத்து மற்றும் இறப்புகள் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். உலக அளவில் வாகன பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் சாலை பொறியியல் தொழில்நுட்பம் மிகப் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கான சிறந்த பயிற்சி, மேம்பட்ட பயிற்சி மையங்கள் ஆகியவை முக்கியம், நல்ல சாலைகளை உருவாக்கி, சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது எனது தார்மீக பொறுப்பு” என்று பேசியவர், மேலும், “நமது இலக்கை அடைய, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு அவசியம்” என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் தமிழகத்தில்தான் நடந்துள்ளதாகவும், 2019ஆம் ஆண்டில் 57,228 விபத்துகள் பதிவாகி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரையில் மொத்தமாக 47,725 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 6,830 உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

புதன் 7 ஜூலை 2021