மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

கட்டடத்தில் உயிர் காக்கும் சாதனம் அவசியம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!

கட்டடத்தில் உயிர் காக்கும் சாதனம் அவசியம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!

புதிதாக மின்சார இணைப்பு கேட்கும்போது கட்டடத்தில் உயிர் காக்கும் சாதனம் பொருத்தியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

மின்சார பழுது மற்றும் மின்சார கசிவால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் ஆர்.சி.டி. என்றழைக்கப்படும் ‘ரெசிடுயல் கரன்ட் டிவைஸ்’ (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தைக் கட்டாயம் அனைத்து மின்சார இணைப்புகளிலும் பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் பகிர்மான விதித் தொகுப்புகளில் புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகள், பூங்காக்கள், தெருவிளக்குகள், கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் ஒருமுனை, மும்முனை மின்சார இணைப்புகளிலும், தற்காலிக மின்சார இணைப்புகளிலும் ஆர்.சி.டி சாதனத்தைப் பொருத்த வேண்டும். மின்சார அதிர்ச்சியைத் தவிர்த்து மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு அதனுடைய மின்சார கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதேபோல 10 கிலோ வாட்டுக்கு மேல் மின்சார சாதனங்களைப் பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக்கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின்சார இணைப்புகளில் மின்சார கசிவால் ஏற்படும் தீ விபத்தைத் தடுக்கும்பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும் அந்தந்த வளாகங்களில் மின்சார இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவுக்கான மின்சார கசிவை உணரும் திறன் கொண்ட சாதனத்தைப் பொருத்த வேண்டும்.

தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதைத் தடுக்கும் வகையில், மின்சார பளுவின் அளவு மற்றும் கட்டடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றை கருத்தில்கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக ஆர்.சி.டி சாதனத்தைப் பொருத்த வேண்டும். அத்தகைய அமைப்பினால், அந்தந்த கட்டடப் பகுதியில் உள்ள மனிதர்கள், அந்தந்தப் பகுதியில் உண்டாகும் மின்சார பழுதினால் ஏற்படும் மின்சார அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள்.

புதிதாக மின்சார இணைப்புக் கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உயிர் காக்கும் சாதனத்தை மின்சார இணைப்புக் கோரும் கட்டடத்தில் நிறுவி அதை விண்ணப்பப் படிவத்தில் உறுதியளிக்க வேண்டும். இல்லையேல், மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது. மின்சார விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை அறவே தடுக்க வேண்டும் என்பது ஆணையத்தின் நோக்கமாகும்.

இந்த சட்டப்பூர்வமான வழிமுறையை அனைத்து பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று மின்சாரப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேற்படி தகவல்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் எஸ்.சின்ராஜூலு தெரிவித்துள்ளார்.

ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

புதன் 7 ஜூலை 2021