மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

மேலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் வேதாந்தா நிறுவனம்!

மேலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் வேதாந்தா நிறுவனம்!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தபோது பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்பட்டது. அதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்த இக்கட்டான சூழலில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்குமாறு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறு அரசுக்கு பரிந்துரைத்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தற்காலிக அனுமதியை தமிழ்நாடு அரசும் வழங்கியது.

இதையடுத்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த மே மாதம் 12ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான அனுமதி இந்த மாதத்துடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 7 ஜூலை 2021