மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

பாலியல் தொல்லை: திருச்சி பேராசிரியர் கைது!

பாலியல் தொல்லை: திருச்சி பேராசிரியர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகனை திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இந்நிலையில், பாலியல் வழக்கில் திருச்சியில் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சில மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் பால் சந்திரன்மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் மற்றொரு பேராசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் ஸ்ரீரங்கம் மகளிர் காவல்துறையினர் இன்று காலை பேராசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர், இந்த விவகாரம் குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதின் பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 7 ஜூலை 2021