மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: பப்பாளி பர்ஃபி!

ரிலாக்ஸ் டைம்: பப்பாளி பர்ஃபி!

இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தி பப்பாளிப் பழத்துக்குண்டு. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவும் பப்பாளிப் பழத்தில் இனிப்பான பர்ஃபி செய்து அனைவரும் ருசிக்கலாம்.

எப்படிச் செய்வது?

நன்கு முற்றிய பப்பாளிப் பழம் ஒன்றைக் கழுவி, மேல் தோலை நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதை மிக்ஸியில் கூழ்போல் அடிக்கவும். பப்பாளிக் கூழுடன் அரை கிலோ சர்க்கரை, ஒரு டீஸ்பூன் நெய், ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து மிதமான சூட்டில் கிளறி, பர்ஃபி பதம் வந்தவுடன் நெய் தடவிய தட்டில் ஊற்றி, வில்லைகள் போடவும்.

சிறப்பு

பப்பாளியில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. வைட்டமின் ஏ குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக பப்பாளி பழம் உண்பது அவசியம்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 7 ஜூலை 2021