மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் பகோடா

கிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் பகோடா

காலை வேளையில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் குழந்தைகள், மாலை வேளையில் தினுசு தினுசாகச் சாப்பிட விரும்புவார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அமையும் இந்த முட்டைகோஸ் பகோடா.

என்ன தேவை?

கடலை மாவு – முக்கால் கப்

அரிசி மாவு – கால் கப்

நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்

வெங்காயம் – 2 கப்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, மற்ற பொருள்களைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்துவைத்திருக்கும் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு

முட்டைகோஸைப் பயன்படுத்தி உள்ளே மிருதுவாகவும் வெளியே க்ரிஸ்பியாகவும் இருக்கும் வகையில் கேப்பேஜ் பால்ஸ், பேட்டீஸ், கட்லெட் போன்ற மொறுமொறு ஸ்நாக்ஸ் வகைகளையும் தயாரிக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: இட்லி மாவு சுய்யம்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

புதன் 7 ஜூலை 2021