மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

வேலையிழந்து கேரளாவுக்குத் திரும்பிய 10.45 லட்சம் பேர்!

வேலையிழந்து கேரளாவுக்குத் திரும்பிய 10.45 லட்சம் பேர்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளிநாடுகளில் வேலையிழந்த 10.45 லட்சம் பேர் கேரளாவுக்குத் திரும்பி உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நாடுகளில் தொழில்கள் முடங்கின. இதனால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்த்த பிற நாட்டினர் தங்களுடைய சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.

இந்த நிலையில், கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், கேரளாவில் இருந்து 27 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளனர்.

இதில் 14,63,176 பேர் மீண்டும் கேரளாவுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 45,288 பேர் (70%க்குக் கூடுதலானோர்) வெளிநாடுகளில் தங்கள் வேலைகளை இழந்ததால் மீண்டும் திரும்பி உள்ளனர்.

இதுதவிர, 2.90 லட்சம் பேர், விசா காலாவதி போன்ற இதர காரணங்களால் நாடு திரும்பியுள்ளனர். கேரளாவுக்குத் திரும்பிய 14.63 லட்சம் பேரில், 96% பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மட்டும் 8.67 லட்சம் பேர் திரும்பி வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வேலையிழந்தவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.5,000 அளிப்பதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இத்தொகை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.7 லட்சமாகும். இதுவரையில் 1.30 லட்சம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு இந்த உதவி பரிசீலனைக்குப் பிறகு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு வந்த தொகை ரூ.85,000 கோடியாகும். கடந்த ஆண்டில் இது ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலோர் தாயகம் திரும்புவதால் அந்தத் தொகையை எட்ட முடியவில்லை.

ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

செவ்வாய் 6 ஜூலை 2021