மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது!

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது!

மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையிலான வசதிகளும், கழிப்பறை வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டடங்கள், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 5) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 32 மாவட்டங்களில் அரசு கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டடங்கள், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என்பது குறித்த விவரங்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டனர்.

மேலும், அனைத்து அரசு கட்டடங்களும், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

அத்துடன், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் கட்டக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், இது சம்பந்தமான சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கூறி, விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கைத் தொடர்ந்த விழிச்சவால் கொண்ட கற்பகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் வழக்கறிஞரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 6 ஜூலை 2021