மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

கழிவுப் பொருட்களின் மூலம் ரூ.4,575 கோடி வருமானம் ஈட்டிய ரயில்வே!

கழிவுப் பொருட்களின் மூலம் ரூ.4,575 கோடி வருமானம் ஈட்டிய  ரயில்வே!

இந்திய ரயில்வே துறை ஸ்கிராப் (கழிவுப் பொருட்களின்) ஏலத்தில் ரூ.4,575 கோடி வருமானம் ஈட்டியதன் மூலம், பயணிகள் ரயிலால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் ரயில்வே நிர்வாகம், பழைய பொருட்களை விற்றதின் மூலம் ரூ.4,575 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே ரயில்வே நிர்வாகம் மிகப்பெரிய வருவாய் இழைப்பைச் சந்தித்து வருகிறது.

ஊரடங்கால் பயணிகள், சரக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதும், புலன்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இலவச சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில், தன்னிடமிருந்து உலோக கழிவுப் பொருட்களை (ஸ்கிராப்) விற்றதின் மூலம் ரயில்வேக்கு ரூ.4,575 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரயில்வேயில் புதிய ரயில் பாதைகள் அமைப்பது, பழைய ரயில் தண்டவாளங்களை மாற்றிவிட்டு புதிய பாதைகள் அமைப்பது, பழைய கட்டடங்களில் இருந்து உடைக்கப்படும் உலோகப் பொருட்கள், பழைய ரயில் இன்ஜின்கள், பெட்டிகள், பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ள டீசல் ரயில் இன்ஜின்கள் போன்றவற்றை ஆண்டுதோறும் மின்னணு ஏலம் மூலமாக ரயில்வே நிர்வாகம் ஏலம் விட்டு வருகிறது.

கடந்த 2019-202ஆம் ஆண்டில் இந்த ஏலத்தின் மூலம் 4,333 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், 2020-2021ஆம் ஆண்டுக்கான ஏலம் கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதன்மூலம், ரூ.4,575 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு கிடைத்ததைவிட ரூ.242 கோடி அதிகமாகும். இதற்கு முன்பு, 2010-2011இல் ரூ.4,409 கோடிக்கு விற்கப்பட்டதே அதிகப்பட்ச தொகையாக இருந்து வந்துள்ளது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

செவ்வாய் 6 ஜூலை 2021