மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை: அமைச்சர் உறுதி!

நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை: அமைச்சர் உறுதி!

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று (ஜூலை 6) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன்,” 1989 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த திருமண நிதி உதவித் திட்டத்தினால் கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கமும் சேர்த்து கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளாக 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இத்திட்டம் நிலுவையில் இருப்பது முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நிலுவை விண்ணப்பங்களின் மீது உடனடி நவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டதின்பேரில், தற்போது திருமண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கிய வைப்பு நிதி பத்திரம் முதிர்வடைந்தும் பணம் திருப்பி வழங்காமல் உள்ளது. இதனை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதால், அதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தருமபுரியில் ஜூன் மாதம் வரை 35 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தை திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாடு அரசால் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், புதிதாக 48 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகி ஒருங்கிணைந்த மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை வழங்கும் மையத்தைத் திறந்து வைத்தார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 6 ஜூலை 2021