மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு தடுப்பூசி : ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு தடுப்பூசி : ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து தடுப்பூசி முகாம்களை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி ஒன்றிய - மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தது. அதில், “நாட்டில், 23.8 சதவிகித வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புகள் உள்ளன. 10.7 சதவிகித வீடுகளில் மட்டும் கணிணி வசதிகள் உள்ளன. 130 கோடி மக்கள் தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளது என்பது 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டட கலை படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு முரணாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதால் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

அதனால், உயர் கல்வி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான கொள்கையை அமல்படுத்தி, அவர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(ஜூலை 6) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானிய குழு ஜூலை 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

செவ்வாய் 6 ஜூலை 2021