மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஜூலை 2021

ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு!

ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காலத்தில் மக்கள் நலனை காக்கும் வகையில் ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. சில இடங்களில் பாதி பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் வந்தது.

உடனடியாக, அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம், அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பில் காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகள் இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரித்ததில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 14 பொருட்களை பைகளில் வைக்கும்போது தற்போது பெறப்பட்ட டீ தூள் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, தவறுதலாக ரேஷன் கடையில் ஏற்கனவே இருப்பிலிருந்த டீ பாக்கெட்டுகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட ரேஷன் கடையினை ஆய்வு மேற்கொண்ட ஆய்வு அலுவலர் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த காலாவதியான டீ தூள் பாக்கெட்டுகளை ஆய்வின்போது சரிபார்த்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற தவறுகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு, வரவு மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது எண்ணெய், டீ தூள், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் காலாவதியாகி உள்ளதா என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான பொருட்கள் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 6 ஜூலை 2021