மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

தனியார் பள்ளிகளில் 25%இட இதுக்கீடு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளிகளில் 25%இட இதுக்கீடு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% சதவிகித இடங்களில் சேருவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்ததிட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. இதற்கு ஜூலை 5(இன்று) முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெறுகிறது.

இணையதளம்மூலம் மாணவரின் புகைப்படம், சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் இல்லம், பள்ளியில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டியது அவசியம். ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆகஸ்ட் 10ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எந்தெந்த குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து 10ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியின் அறிவிப்பு பலகையிலும், இணையதளத்திலும் வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 14ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

திங்கள் 5 ஜூலை 2021