மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட் மிக்ஸ் அவல் பிரட்டல்

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட் மிக்ஸ் அவல் பிரட்டல்

காலை உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையில் ரிலாக்ஸ் டைமில் இதைச் சாப்பிடுவதன் மூலம், அந்த நாளுக்குத் தேவையான முழுச் சத்துகளும் கிடைத்துவிடும்.

எப்படிச் செய்வது?

ஆப்பிள் ஒன்று, கொய்யாப்பழம் ஒன்று, வாழைப்பழம் ஒன்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 200 கிராம் சிவப்பு அவலை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்துகொள்ளவும். பவுலில் ஊறவைத்த அவல், நறுக்கிய கொய்யாப்பழம், ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை முத்துகள் கால் கப், உலர்ந்த திராட்சை சிறிதளவு, வெல்லம் சிறிதளவு, சுக்குத்தூள் கால் டீஸ்பூன், தேன் இரண்டு டீஸ்பூன் ஊற்றி அனைத்தும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

குறிப்பு

அவலுக்கு பதில் ஓட்ஸ் பயன்படுத்தலாம்.

சிறப்பு

சிவப்பு அவலில் கலோரி, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளன. வெல்லத்தில் இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது. பழங்களின் அனைத்து சத்துகளும் உள்ளதால் அனைவருக்கும் ஏற்றது.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

திங்கள் 5 ஜூலை 2021