மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: சப்போட்டா கேசரி!

கிச்சன் கீர்த்தனா: சப்போட்டா கேசரி!

பள்ளிகள் திறக்கப்படாமல் லாக்டெளனில் சிக்கியிருக்கின்ற குழந்தைகளைக் குஷிப்படுத்த அம்மாக்களிடம் இருக்கின்ற மிக முக்கியத் துருப்புச்சீட்டே அவர்களின் வெரைட்டி சமையல்தான். அதற்கு எளிதாகச் செய்யக்கூடிய இந்த சப்போட்டா கேசரி துணைபுரியும்.

என்ன தேவை?

பழுத்த சப்போட்டா – 10 (சுத்தம் செய்து சதைப்பகுதிகளை விழுதாக எடுத்துக்கொள்ளவும்)

ரவை – ஒரு கப்

சர்க்கரை – ஒரு கப்

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

நெய் – முக்கால் கப்

முந்திரி – 10

உலர்திராட்சை – 10

வெந்நீர் – 3 கப்

எப்படிச் செய்வது?

வாணலி சூடேறியதும், நெய் முழுவதையும் சேர்த்து அதில் முந்திரி, உலர்திராட்சை இரண்டையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதிலேயே ரவையைச் சேர்த்து மூன்று நிமிடங்கள் வாசனை வரும்வரை வறுக்கவும்.

ரவை வறுபட்டவுடன் அதில் மூன்று கப் வெந்நீரைச் சேர்த்து நன்கு கிளறவும். வெந்நீர் வற்றி ரவை நன்கு வெந்தவுடன் அக்கலவையில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். கலவை முதலில் நீர்த்து, பின்பு கெட்டியாகத் தொடங்கும்.

இப்போது சப்போட்டா விழுதை சேர்த்து நன்கு கிளறவும். மூன்று நிமிடங்கள் கழித்து இறக்கி வறுத்த முந்திரி, உலர்திராட்சையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

நேற்றைய ஸ்பெஷல்: ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு எளிய மருத்துவம்!

.

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

திங்கள் 5 ஜூலை 2021