மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

குழந்தை விற்பனை: அறக்கட்டளையின் நிறுவனர் கைது!

குழந்தை விற்பனை: அறக்கட்டளையின் நிறுவனர் கைது!

மதுரையில் சட்டவிரோதமாகக் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இதயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளை முதியோர் காப்பகத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டனர். இதயம் அறக்கட்டளைக்கு சீல் வைத்த அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள காப்பகத்தின் நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர்ஷா ஆகிய இருவரையும் மூன்று தனிப்படையினர் தேடி வந்தனர்.

சென்னை, புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் பிற மாநில எல்லைப்பகுதியில் தனிப்படையினர் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில், தேனி மாவட்டம் போடி அருகே தமிழக எல்லைப் பகுதியில் வைத்து சிவக்குமார், மாதர்ஷாவை போலீஸார் கைது செய்தனர். அவர்களை மதுரைக்கு அழைத்து வந்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 4 ஜூலை 2021