மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

குறையும் மேட்டூர் அணையின் நீர்வரத்து!

குறையும் மேட்டூர் அணையின் நீர்வரத்து!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 1,101 கன அடியில் இருந்து நேற்று (ஜூலை 3) 836 கன அடியாகக் குறைந்துள்ளது. தற்போது அணையில் 44.07 டிஎம்சி அளவு நீர் இருப்பு உள்ளது. இதனால் அணையிலிருந்து அனுப்பப்படும் நீரின் அளவு குறைக்கப்படுமா என்கிற கேள்வி விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்சமயம் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று (ஜூலை 3) நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 83.29 அடியிலிருந்து 82.09 அடியாக சரிந்தது.

நேற்று முன்தினம் (ஜூலை 2) நீர்வரத்து 1,101 கன அடியாக இருந்த நிலையில் நேற்று (ஜூலை 3) நிலவரப்படி 836 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 44.07 டிஎம்சி அளவு நீர் இருப்பு உள்ளது. இதனால் அணையிலிருந்து அனுப்பப்படும் நீரின் அளவு குறைக்கப்படுமா என்கிற கேள்வி விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது.

-ராஜ்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஞாயிறு 4 ஜூலை 2021