மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

முதல்வரிடம் பாராட்டு பெற்ற கலெக்டரை வரவேற்ற பழங்குடியினர்!

முதல்வரிடம் பாராட்டு பெற்ற கலெக்டரை வரவேற்ற பழங்குடியினர்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு சான்றிதழ் பெற்று ஊட்டிக்குத் திரும்பிய நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை கோத்தர் இன மக்கள் வரவேற்று, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியாவில் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நீலகிரியை முதன்மை மாவட்டமாக மாற்றியதைத் தொடர்ந்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அதை பெற்றுக்கொண்டு ஊட்டிக்குத் திரும்பிய கலெக்டருக்கு கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தபடி வரவேற்பு அளித்தனர். மேலும் சால்வை அணிவித்தனர்.

அவர்களிடம் பேசிய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, “நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததால்தான் இந்த நிலையை எட்ட முடிந்தது. உங்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்” என்று நெகிழ்ந்துள்ளார்.

-ராஜ்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

ஞாயிறு 4 ஜூலை 2021