மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் மின்சார ரயில்கள்!

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் மின்சார ரயில்கள்!

இன்று (ஜூலை 4) முதல் கடற்கரை - வேளச்சேரி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கூடுதலாக 26 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் இன்று (ஜூலை 4ஆம் தேதி) முதல் இயக்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே 50 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக 26 மின்சார ரயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

அதேபோல், சென்னை கடற்கரை - அரக்கோணம் இடையே அனைத்து நாட்களும் ஒரு ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 447 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

ஞாயிறு 4 ஜூலை 2021