மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ஆபத்தான கட்டத்தில் உலகம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஆபத்தான கட்டத்தில் உலகம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

டெல்டா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்துகொண்டே இருப்பதால் உலக நாடுகள் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலை தற்போது குறைந்து வருகிறது. இருப்பினும், உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளும் கவலையில் உள்ளன.

இந்த நிலையில் ஜெனீவா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், ”கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. உலகின் 98 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வீரியமிக்கதாக மாறி வருவதால் உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

இந்த ஆபத்துக்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல. இந்த கொரோனா வைரஸ் குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்த பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

பொது சுகாதாரம், ஆரம்ப நிலையில் தொற்று பாதிப்பைக் கண்டறிதல், மருத்துவப் பராமரிப்பு போன்றவை மிக முக்கியமானவை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் போன்ற வழிகாட்டு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவிகித மக்களாவது கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அடுத்த ஆண்டு இதே நேரத்தில், ஒவ்வொரு நாட்டிலும் 70% மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விரைவில் நாம் அதிக தடுப்பூசிகளை உற்பத்தி செய்வோம். உலக அளவில் தடுப்பூசி திறனை உயர்த்தி, விரைவில் நாம் கொடிய கொரோனாவை ஒழிப்போம்” என்று நம்பிக்கை அளித்தார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 4 ஜூலை 2021