மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

நகை, துணிக்கடை ஊழியர்களுக்குத் தடுப்பூசி: ஆணையர்!

நகை, துணிக்கடை ஊழியர்களுக்குத் தடுப்பூசி: ஆணையர்!

நகை, துணிக்கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

நாளை காலையுடன் முடிவடைய உள்ள ஊரடங்கு, கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை 50% பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் துணி, நகைக்கடை மற்றும் வழிப்பாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று (ஜூலை 3) சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இருப்பினும், மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

கடை உரிமையாளர்களும், மக்களும் எங்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீடிக்கப்படும்.

நகை, துணி மற்றும் உணவகக் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும். தேவைப்பட்டால், அவர்களுக்குத் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

கடைகளுக்கு வெளியே கிருமி நாசினியும், உடல் வெப்ப பரிசோதனை செய்யும் கருவியையும் பொருத்தி வாடிக்கையாளருக்கு உடல் வெப்பநிலை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கோயம்பேடு சந்தையில் உள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களைக் கண்காணித்து வருகிறோம். இதுவரை 21 திருமண மண்டபங்களில் விதிமுறைகளை மீறியதாக 84,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பேசிய ஆணையர் சங்கர் ஜிவால், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதை முழுமையாகக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சென்னையில் 20 இடங்களில் பொதுமக்கள் அதிகமாகக் கூடுகின்றனர். அங்கு பொதுமக்களுக்குத் தொற்று பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும். மீன் வாங்க மக்கள் குவியும் நொச்சிக்குப்பம், வானகரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கும் நுழைவாயிலில் தடுப்புகள் போடப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவுள்ளது. சுய கட்டுப்பாடுகள்தான் கொரோனா தொற்று மீண்டும் பரவாமல் தடுக்கும்” என்று பேசினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 4 ஜூலை 2021