மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

கோயில் புறம்போக்கு நிலம்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

கோயில் புறம்போக்கு நிலம்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

தமிழ்நாடு முழுவதும் கோயில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில்,” சேலம் மாவட்டம் உலிபுரத்தில் உள்ள அருள்மிகு கம்பராய பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 3.88 ஏக்கர் நிலத்தை, ஆனந்தன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூலை 3) நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எஸ்.கண்ணம்மாள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், 2015ஆம் ஆண்டு மே 25ஆம் தேதியே கோயில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி மேட்டூர் துணை ஆட்சியர், சேலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் அறிக்கை அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சேலம் மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் வட்ட வாரியாக கோயில் புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், இந்து அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதுவரை, இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடிக்கும் மேலான மதிப்பு கொண்ட 79 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 3 ஜூலை 2021