மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

மதுரையில் மேலும் ஒரு பெண் குழந்தை மீட்பு!

மதுரையில் மேலும் ஒரு பெண் குழந்தை மீட்பு!

மதுரையில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மேலும் ஒரு பெண் குழந்தையை சமூக நலத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் அறக்கட்டளை என்ற பெயரில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்தை சிவக்குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார். இங்கு 70க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் பெண்கள் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது மகன் மாணிக்கம் கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகமாடி, தம்பதி ஒருவருக்கு விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீதேவி என்பவரின் பெண் குழந்தையும் விற்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு குழந்தைகளும் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள சிவக்குமாரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

குழந்தை விற்பனை சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மேலும் ஒரு பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த தம்பதியிடம் இருந்து 2 வயது பெண் குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த குழந்தை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தை இதயம் அறக்கட்டளையில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டதா? அக்குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

சனி 3 ஜூலை 2021