மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்: பச்சரிசி பாயசம்!

ரிலாக்ஸ் டைம்: பச்சரிசி பாயசம்!

செட்டிநாடு உணவு என்றாலே அசைவம்தான் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், செட்டிநாட்டு சைவ உணவுகளும் அசைவ உணவுகளைப் போலவே தனித்துவமானவை. அதில் இந்தப் பச்சரிசி பாயசமும் ஒன்று. உணவு நேரத்தில் மட்டுமல்ல; ரிலாக்ஸ் டைமிலும் சாப்பிட்டு புத்துணர்வு பெறலாம்

எப்படிச் செய்வது?

அரை உழக்கு பச்சரிசியைக் கழுவி சுத்தம் செய்து குக்கரில் நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு வேகவிடவும். நன்றாக வெந்தபின் தேவையான அளவு வெல்லத்தை உடைத்து அரிசியில் போட்டு பச்சை வாசனைபோகும் வரை கொதிக்க விடவும். அத்துடன் அரை மூடி தேங்காய்த்துருவலையும், பத்து முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கவும். பிறகு பொடித்த ஐந்து ஏலக்காயைத் தூவி நன்கு கரண்டியால் கலக்கி இறக்கவும்.

சிறப்பு

புரோட்டீன், கார்ப்போஹைட்ரேட் நிறைந்த இந்த பாயசம் அனைவரும் ஏற்றது. ஆரோக்கியமானது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 3 ஜூலை 2021