மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் திடீர் போராட்டம்: ஸ்தம்பித்த அண்ணா சாலை!

ஓலா, ஊபர் ஓட்டுநர்களின் திடீர் போராட்டம்: ஸ்தம்பித்த அண்ணா சாலை!

ஓலா, ஊபர் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சாலை பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடம் அண்ணா சாலை. இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்ட ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் கார்கள் இயக்கும் டாக்ஸி ஓட்டுநர்கள் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து எல்ஐசி சிக்னல் வரை தங்களது வாகனங்களை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2014 ஆம் ஆண்டு முதல் மீட்டர் கட்டணத்தை உயர்த்தவில்லை. இந்த நிறுவனங்கள் அதிக கமிஷன் தொகையை வசூலித்து வருகிறது. எனவே கமிஷனாக பெரும் 30 சதவிகித தொகையை 10 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், எங்கள் பிரச்சினையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா சாலையில் கோஷமிட்ட படியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அண்ணா சாலையே ஸ்தம்பித்துக் காணப்பட்டது.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவல்லிக்கேணி துணை ஆணையர் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து போலீசாரின் தடையை மீறி வாகனங்களைச் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த கார் ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அண்ணாசாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த கார்களையும பறிமுதல் செய்தனர்.

அது போன்று தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி அருகே ஓலா மற்றும் ஊபர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வாகனங்களைச் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-பிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 3 ஜூலை 2021