மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: உளுந்து சாதம்

கிச்சன் கீர்த்தனா: உளுந்து சாதம்

இட்லி, தோசை, வடைக்கு மட்டுமல்ல; உளுந்து கொண்டு சாதம் செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடலுக்கு ஏராளமான சத்துகளை அள்ளித்தரும் இந்த உளுந்து சாதம் அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

பாசுமதி அரிசி - ஒரு கப்

உடைத்த கறுப்பு உளுந்து - அரை கப்

கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறு துண்டு

பச்சை மிளகாய் - 4

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

உளுந்துப்பொடி - ஒரு டீஸ்பூன்

உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்

ஓமம் - கால் டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் உளுந்தைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை பொலபொலவென்று வடித்து ஆறவைக்கவும். ஊறிய உளுந்தின் நீரை வடித்துவிட்டு, கொத்தமல்லித்தழை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு, தீயை மிதமாக்கி அரைத்தவற்றைச் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். அதிக நேரம் உளுந்தை வதக்கினால் உளுந்து மொறுமொறுப்பாகி விடும்.

சாதத்தில் தேவையான உப்பு, வதக்கிய மசாலாவைச் சேர்த்துக் கிளறி உளுந்துப் பொடியைத் தூவவும். பரிமாறும் முன் நெய்யில் கறிவேப்பிலை, முந்திரியை வறுத்து சாதத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:

அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பிறகு நீரை வடித்து, வாணலியில் வறுத்து பின்னர் சாதம் வடிக்கவும். உளுந்துப் பொடிக்கு, வெறும் வாணலியில் முழு உளுந்தை பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும்.

நேற்றைய ரெசிப்பி: உளுந்து டோஸ்ட்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 3 ஜூலை 2021