மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்: திருப்பதி தேவஸ்தானம்!

தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்: திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதியில் பணியாற்றும் ஊழியர்கள் தடுப்பூசி போட்டால் மட்டுமே இந்த (ஜூலை) மாத சம்பளம் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு வருவதால் தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

திருமலை மட்டுமல்லாது திருப்பதியில் உள்ள மத்திய மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி போடுவது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் சிலர் இதுவரை தடுப்பூசி போடவில்லை என தேவஸ்தானம் கண்டறிந்துள்ளது.

அவர்கள் அனைவரும் ஜூலை 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டால் மட்டுமே இந்த ஜூலை மாத ஊதியம் வழங்கப்படும். அதுவரை அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

-ராஜ்

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

வெள்ளி 2 ஜூலை 2021