மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

காலணி தயாரிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்!

காலணி தயாரிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்!

தமிழ்நாட்டில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நேற்று முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி செயல்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பெற்று தர வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், பிழைப்பூதியம் வழங்குதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும், தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியத்தை நிர்ணயம் செய்து தமிழக தொழிலாளர் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து வகை நகராட்சிகள், மாநகராட்சிகளில் பணிபுரிவோருக்கு தனியாகவும், இதர பேரூராட்சிகள், ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு தனியாகவும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகராட்சிகளில் பணிபுரிந்து வரும் காலணி தயாரிக்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 4 ஆயிரத்து 933 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பேரூராட்சிகள், நகராட்சிகளில் பணிபுரிவோருக்கு 4 ஆயிரத்து 843 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கணக்காளர், ஸ்டோர் கீப்பர் ,அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ,வாட்ச்மேன் என அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியத்தை நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.

சில இடங்களில் குறைந்தபட்ச ஊதியத்தை விட, அதிகமான தொகை தற்போது வழங்கப்பட்டு வந்தால், அதையே தொடர வேண்டும் . ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

வெள்ளி 2 ஜூலை 2021