மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: உளுந்து டோஸ்ட்

கிச்சன் கீர்த்தனா: உளுந்து டோஸ்ட்

வெள்ளை உளுந்தில் ஊட்டச்சத்து குறைவு என்றாலும் இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும் நிறைந்திருக்கின்றன. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும் என்பதால் காலை வேளையில் எளிதாகச் செய்யக்கூடிய இந்த உளுந்து டோஸ்ட் அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

பிரெட் துண்டுகள் - 8 ஸ்லைஸ்

வெண்ணெய் - தேவையான அளவு

நெய் - தேவையான அளவு

அரைக்க

முழு வெள்ளை உளுந்து - அரை கப்

சோம்பு - அரை டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

இட்லி மிளகாய்ப்பொடி - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

சட்னிக்கு

பச்சை மிளகாய் - 2

சீரகம் - அரை டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - அரை மூடி

கொத்தமல்லித்தழை - அரை கட்டு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். சட்னிக்குக் கொடுத்துள்ளவற்றை தனியாக அரைக்கவும். பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவவும். வெண்ணெய் தடவிய ஒரு பகுதியின் மேல் அரைத்த சட்னி, அதன் மேல் அரைத்த உளுந்து விழுதை வைக்கவும். பிறகு வெண்ணெய் தடவிய மற்றொரு பிரெட்டால் மூடி, பிரெட் முழுவதும் நெய் தடவி டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும். டோஸ்டர் இல்லையெனில் தோசைக்கல்லில் நெய்விட்டு பிரெட்டை வைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: உளுந்து மசாலா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 2 ஜூலை 2021