மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

எஸ்பிஐ: மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம்!

எஸ்பிஐ: மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம்!

ஏடிஎம் அல்லது தங்களது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால், சேவை கட்டணம் விதிக்கப்படும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டண முறை இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்பிஐ - ஏடிஎம் அல்லது கிளைகளில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது பரிவர்த்தனை முதல் சேவை கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும். வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தைப் பெற 40 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால், 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகத்துக்கான புதிய சேவை கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை, ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு இருந்த சலுகைகளைக் குறைக்கவும் சேவை கட்டணங்களை அதிகரிக்கவும் எஸ்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 1 ஜூலை 2021