மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

இந்தியப் பயனர்களின் 59,350 உள்ளடக்கங்களை நீக்கிய கூகுள்!

இந்தியப் பயனர்களின் 59,350 உள்ளடக்கங்களை நீக்கிய கூகுள்!

இந்தியப் பயனர்களின் புகார்களைத் தொடர்ந்து கடந்த மாதம் கூகுள் 59,350 உள்ளடக்கங்களை நீக்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை வெளியிட்டது. இந்த விதிகளுக்கு உடன்படுவதாக மே 25ஆம் தேதிக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்காது. ஏதேனும் புகார் வரும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதிகளில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு இணங்கி செயல்பட சம்மதம் தெரிவித்தன.

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் முதல் மாத வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, இந்தியாவில் தனிப்பட்ட பயனர்களிடமிருந்து 27,700-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் கூகுள் தனது சமூக ஊடக தளங்களில் இருந்து சுமார் 59,350 உள்ளடக்கங்களை நீக்கியுள்ளது.

அந்தப் புகார்களில் சுமார் 96 சதவிகிதம் பதிப்புரிமை தொடர்பான பிரச்சினைகளும் அதைத் தொடர்ந்து வர்த்தக முத்திரை தொடர்பாக (1.3 சதவிகிதம்), அவதூறு (1 சதவிகிதம்), சட்டம் (1 சதவிகிதம்), போலியானவை தொடர்பாக (0.4 சதவிகிதம் ) மற்றும் சூழ்ச்சி தொடர்பாக (0.1 சதவிகிதம்) இருந்துள்ளன.

இதுகுறித்து, கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மின்னஞ்சல் அறிக்கையில், “உலகெங்கிலும் இருந்து பெறும் பல்வேறு வகையான கோரிக்கைகள் மற்றும் அதற்கு எவ்வாறு பதிலளிக்கப்படுகிறது என்பதில் வெளிப்படைத்தன்மையை நிறுவனம் கொண்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் 2010 முதல் நிறுவனத்தின் தற்போதைய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் கண்காணிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி மாதாந்திர வெளிப்படைத்தன்மை அறிக்கையை நாங்கள் வெளியிடுவது இதுவே முதன்முறையாகும். மேலும், இந்தியாவுக்கான எங்கள் அறிக்கை செயல்முறைகளை நாங்கள் செம்மைப்படுத்துவதால் மேலும் விவரங்களைத் தொடர்ந்து வெளியிடுவோம்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 1 ஜூலை 2021