மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

ஆன்லைன் கேம்களை அரசுகளால்தான் தடுக்க முடியும்!

ஆன்லைன் கேம்களை அரசுகளால்தான் தடுக்க முடியும்!

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் இருப்பதை ஒன்றிய, மாநில அரசுகளால்தான் தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மார்டின் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக் கொண்டுவர உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(ஜூலை 1) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாப்பாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் ஆளாகின்றனர்.

இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு பப்ஜி மதன் போன்றவர்கள் மட்டுமே காரணம் இல்லை. நாடு முழுவதும் இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களும் காரணம்தான். அவர்களை பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கையை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அதேசமயம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளுக்கும் அவர்கள் அடிமையாகி விடுகின்றனர் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

படிப்பு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட காரணங்களுக்காக, அதிக அளவில் செல்போன் மற்றும் கணினியை பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாகின்றனர். மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகளால் தான் தடுக்க முடியும்.

பெற்றோர் மற்றும் பெரியோர்களிடம் குழந்தைகள் பேசுவது குறைந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்த அறிவுறுத்த வேண்டும். அவர்களுக்கு தங்களை கட்டுப்படுத்தி கொள்ளும் சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 1 ஜூலை 2021