மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

சர்வதேச சைபர் பாதுகாப்பு: இந்தியாவின் இடம்!

சர்வதேச சைபர் பாதுகாப்பு: இந்தியாவின் இடம்!

சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீட்டு பட்டியலில் இந்தியாவின் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐநா வெளியிட்டுள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு அட்டவணையில் (குறியீடு) 47ஆவது இடத்தில் இருந்து 10ஆம் இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இத்தகைய பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 2020ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியா 37ஆவது இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச அமைதி மற்றும் சைபர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பேசியபோது, “பயங்கரவாத குழுக்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் வெறுப்புணர்வை விதைக்கவும் இணையவெளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதுபோன்ற இணையவெளி தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 33ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 79ஆவது இடத்திலும் உள்ளன.

“சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல; இணையதளம் பயன்படுத்தும் நமக்கும் தொடர்பு இருக்கிறது. நம்முடைய தினசரி வாழ்க்கையை எளிமையாக்க எல்லா வகையான நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் நமக்கு, சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லை என்றால் எந்தப் பயனும் இல்லை” என்பதே தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரையாகும்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வியாழன் 1 ஜூலை 2021